கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை- இரண்டு பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பியில், கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளநீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். செவ்வாய்கிஅமை மாலை மங்களூரு அருகே கால்வாயை கடக்க முயன்ற 52 வயதுடைய சுரேஷ் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இதேபோல் செவ்வாய்க்கிழமை இரவு உடுப்பி மாவட்டம் மாலியடியில் சாலையின் குறுக்கே பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் வந்த 65 வயது திவாகர் ஷெட்டி என்ற முதியவர் உயிரிழந்தார்.


தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் தட்சிண கன்னடா – ரெட் அலர்ட், உடுப்பி, சிக்கமகளூர், குடகு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்


