Homeசெய்திகள்இந்தியாதமிழகத்தில் 4 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி!

தமிழகத்தில் 4 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி!

-

 

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PM Narendra Modi

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 100- க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு மீண்டும் வருகிறார்.

“மோடியின் குடும்பம் ED, IT, CBI தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்குச்சேரிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 09- ஆம் தேதி அன்று தமிழகம் வருகிறார். வேலூர், தென் சென்னை, நீலகிரி, கோவை, பெரம்பலூர், விருதுநகர் ஆகிய 6 மக்களவைத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.

வரும் ஏப்ரல் 09- ஆம் தேதி மாலை 04.00 மணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூரில் வாகனப் பேரணியில் ஈடுபடுகிறார். அன்று மாலை 06.00 மணிக்கு தென் சென்னை வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து சென்னையில் பிரதமர் வாகனப் பேரணியில் செல்லவிருக்கிறார்.

வரும் ஏப்ரல் 10- ஆம் தேதி காலை 11.00 மணியளவில் பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நீலகிரியில் வாகனப் பேரணியில் செல்லும் பிரதமர், கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையை ஆதரித்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுகிறார்.

“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!

ஏப்ரல் 13- ஆம் தேதி காலை 11.00 மணியளவில் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தரை ஆதரித்து பெரம்பலூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்குச்சேகரிக்கும் பிரதமர், ஏப்ரல் 14- ஆம் தேதி காலை 11.00 மணியளவில் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொள்கிறார்.

MUST READ