
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, அவருக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சதீஸ் சந்திரமிஸ்ரா அனுப்பியுள்ள கடிதத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகள் கருத்தியியல் ஒழுங்கிற்கு எதிராக, தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
தங்களது நடவடிக்கையை பலமுறைக் கண்டித்தும் தாங்கள் அதனை மாற்றிக் கொள்ளாததன் காரணத்தால், தங்களைக் கட்சியில் இருந்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக டேனிஷ் அலிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைமையின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள டேனிஷ் அலி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சிக்கு சேவை செய்ய அனுமதி வழங்கியதற்காக மாயாவதிக்கு அவர் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டேனிஷ் அலி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் பிரிந்து கடந்த 2019- ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.