spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபீகாரில் சோகம்! லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் பலி

பீகாரில் சோகம்! லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் பலி

-

- Advertisement -

பீகார் மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள மோகனியா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அந்த ஜீப்பில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பயணிம் செய்தனர். தேவ்காளி என்ற கிராமம் அருகே ஜீப் சென்றுகொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் முன்னே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி, அதன்பின் எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்தவர்களுக்கும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஜீப் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்தது லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்துக்கு அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

MUST READ