
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் பேச்சைக் கேட்டு நடந்துக் கொள்வதாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ரத்னம் படத்தை புறக்கணிக்கும் பிரியா பவானிசங்கர்… படக்குழுவுடன் பிரச்சனையா?…
மக்களவைத் தேர்தலையொட்டி, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவும் துணை முதலமைச்சர் சிவக்குமாரும் உரையாடல் நடத்திய வீடியோவை கர்நாடகா மாநில காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த கலந்துரையாடலில், “கர்நாடகா மட்டுமல்லாமல், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும்” என முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் சிவக்குமாரும் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
நாட்டில் மோடியின் அலை வீசவில்லை எனத் தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் சிவக்குமார், நடைபெறும் தேர்தலில் 200 இடங்களில் கூட பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாது எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, பேசிய முதலமைச்சர் சித்தராமையா, மேகதாதுவில் அணைக்கட்டும் விவகாரத்தில் தி.மு.க. அரசின் பேச்சை மத்திய அரசு கேட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
நடிகர்களையும் விட்டுவைக்காத டீப் பேக்… மர்ம கும்பல் மீது ரன்வீர் சிங் வழக்குப்பதிவு…
மேலும் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, “நமது குடிநீர் தேவைக்காக மேகதாதுவில் அணை கட்டுகிறோம். இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வராது. தீர்ப்பாயம் கூறிய நீரை நாம் முறையாக விடுவித்து விடுகிறோம். குறிப்பிட்ட அளவு நீரை மட்டுமே கோர அவர்களுக்கு உரிமை உண்டு. மத்திய பா.ஜ.க. அரசுடன் தி.மு.க. இணக்கமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.