மத்திய பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, செய்தியாளர்கள் சந்திப்பு
குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயகடன் தள்ளுபடி உள்ளிட்ட எந்த அறிவிப்பு இல்லை.பருத்தி விலை குறைப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.விலைவாசி உயர்வை குறைக்க எந்த திட்டமும் இல்லை. 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு என்பதன் முழு விவரம் வந்த பின்னர் தான் தெரிய வரும். GST வரி மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இவ்வாறு கொடுமையான வரி விதிப்பு திட்டம் இருக்கும் நிலையில் இந்த வருமான வரி விலக்கு எந்த அளவு நன்றாக இருக்கும் என்பது தெரியவில்லை. 36 உயிர்காக்கும் மருந்துக்கு சுங்க வரி இல்லை என கூறப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் அரசு இருந்தபோது விலை குறைவாக இருந்த விலையை அதிகரித்து விட்டு தற்போது குறைத்துள்ளனர்.
கல்வி,பொது மருத்துவத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. பெண்கள் முன்னேற்றத்துக்கு எந்த அறிவிப்பும் இல்லை. தொலைநோக்கு பார்வையுடன் இந்த பட்ஜெட் இல்லை. நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட என்ன செய்யப்போகிறார்கள் என்பது தொடர்பாக எதுவும் இல்லை. விவசாயிகள், எம்.எஸ்.எம்.இ, பெண்கள், மாணவர்கள் ஆகியோருக்கு எந்த அறிவிப்பும் இல்லாத பட்ஜெட்.
தமிழ்நாட்டுக்கு என சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை என்பது ஏமாற்றம். தமிழகத்துக்கு எதிராகவே மத்திய அரசு உள்ளது. விமான நிலையம், துறைமுகம், கனிம வளம் என அதிகமாக பயன் படுத்தப்பட்டது, அறிவிப்புகளும் அதனை சார்ந்து இருந்தது, இது அனைத்தும் அதானிக்கு சாதகமானது.
ஒட்டுமொத்தத்தில், இது நடுத்தர வர்க்க மக்கள் என்ற முலாம் பூசப்பட்ட பிரதமர் மோடியின் நண்பர்களுக்கான பட்ஜெட்