spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை!

ஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை!

-

- Advertisement -

 

we-r-hiring

ஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், பட்டியலில் உள்ள தடை செய்யப்பட்ட நாய்களில் இறக்குமதி, விற்பனை மற்றும் இனப்பெருக்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடை செய்யப்பட்ட நாய்களை ஏற்கனவே வைத்திருக்கும் நபர்கள், அவற்றின் இனப்பெருக்கத்தை தடுக்க அவற்றுக்கு கருத்தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தடை செய்யப்பட்ட ஆபத்தான நாய் இனங்களா பிட்புல் டெரியர, தோசா இனு, அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர், ஃபிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போஸ்போல், கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகசியன் ஷெப்பர்ட் நாய், தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய், டோர்ன்ஜாக், சர்ப்லானினாக், ஜப்பானிய தோசா மற்றும் அகிதா, மாஸ்டிஃப்ஸ், ராட்வெய்லர், டெரியர்கள், ரோடீசியன் ரிட்ஜ்பேக், உல்ஃப் நாய்கள், கனாரியோ, அக்பாஷ், மாஸ்கோ காவலர், கேன் கோர்சோ, பந்தோக் ஆகிய வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக நிபுணர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அடங்கிய குழு, தங்களது அறிக்கையை சமர்ப்பித்ததை அடுத்து மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

MUST READ