Homeசெய்திகள்இந்தியாமுன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கு....நீதிபதிகள் மாறுபட்டத் தீர்ப்பு!

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கு….நீதிபதிகள் மாறுபட்டத் தீர்ப்பு!

-

 

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!
File Photo

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்டத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகையும் வளைத்துப்போட்ட நெட்பிளிக்ஸ்

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீது ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு வழக்குப்பதிவுச் செய்திருந்தது. அதைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தின் சிஐடி காவல்துறையினர், சந்திரபாபு நாயுடுவை அதிரடியாக கைது செய்து ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடுவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, அவருக்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த சூழலில், தன் மீதான எப்.ஐ.ஆர்.ஐ ரத்துச் செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அதனை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு செய்திருந்தார்.

தூள் கிளப்பும் குண்டூர் காரம்… படக்குழு வெற்றிக் கொண்டாட்டம்…

வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் மாறுபட்டத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனால் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிருத்தா போஸ், முன் அனுமதியின்றி விசாரணை நடவடிக்கை மேற்கொண்டால் சட்டவிரோதமானது; ஊழல் தடுப்புச் சட்டத்தில் அரசு ஊழியரை விசாரிக்க முன் அனுமதி பெற வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளார்.

MUST READ