கர்நாடக சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின் 42 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ள இரண்டாம் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
இரண்டாவது பட்டியலில் 42 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முதல் வேட்பாளர் பட்டியலில் 124 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது 42 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 58 வேட்பாளர்கள் பட்டியல் இந்த வாரம் இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வெளியாகி உள்ள 42 வேட்பாளர்கள் பட்டியலில் பாஜக கட்சியில் இருந்து கடந்த வாரம் விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஒரு பாஜக மேலவை உறுப்பினர்களுக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பாஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணாவுக்கு மொல்கால்மூறு தொகுதியிலும், மேலவை உறுப்பினர் பாபு ராவ் சின்சன்சூரு அவர்களுக்கு குருமிட்கல் தொகுதியிலும் போட்டியிட்ட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.