
பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதியின் பதவி உயர்வை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுஷ்கா படத்திற்காக பாடகர் ஆகும் தனுஷ்!
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் கீழமை நீதிமன்ற நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இதையடுத்து, ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில், நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மாவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.
என்னைய கெட்ட வார்த்தை பேச வைக்காதீங்க… ஆத்திரமடைந்த நட்டி நடராஜ்!
இந்த நிலையில், நீதிபதிகளின் பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 68 நீதிபதிகளின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. அதில், சூரத் நீதிபதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


