spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"மாநிலத்துக்கான ஐ.பி.எல். அணி உருவாக்கப்படும்"- காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

“மாநிலத்துக்கான ஐ.பி.எல். அணி உருவாக்கப்படும்”- காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

-

- Advertisement -

 

"மாநிலத்துக்கான ஐ.பி.எல். அணி உருவாக்கப்படும்"- காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!
Photo: Former CM Kamal Nath

மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், பள்ளிக்கல்வி இலவசமாக வழங்கப்படும்; மாநிலத்துக்கான ஐ.பி.எல். அணி உருவாக்கப்படும் உள்ளிட்ட 59 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அள்ளி வீசியுள்ளது.

we-r-hiring

அத்திப்பள்ளி பட்டாசு குடோன் வெடி விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில், நடைபெற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத், காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் திக் விஜய் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.

அதில், அனைவருக்கும் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவக் காப்பீடு திட்டம், 2 லட்சம் ரூபாய் வரையிலான வேளாண் கடன் தள்ளுபடி, மகளிருக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஊக்கத்தொகை, சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு விநியோகம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் இதில் அடங்கும். ஏற்கனவே, சாதிவாரி கணக்கெடுப்பு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு போன்றவையும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்வு!

மத்திய பிரதேசம் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 17- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மாநிலத்துக்கு ஐ.பி.எல். அணி உருவாக்கப்படும் என முதல் முறையாக அரசியல் கட்சி, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது கவனம் பெற்றுள்ளது.

MUST READ