Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாஷ் நாதன் பதவி ஏற்றார்

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாஷ் நாதன் பதவி ஏற்றார்

-

புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் பதவி ஏற்றார்புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கைலாஷ் நாதன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதினால், துணைநிலை ஆளுநர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக  ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன்  கூடுதல் பொறுப்பு தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அவர் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாசநாதனை  நியமித்தார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு புதிய வணிக வளாகங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறப்பு

கைலாஷ் நாதன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் குஜராத்தில் பணியாற்றியவர், குஜராத் முதல்வர் அலுவலகத்திலேயே ஓய்வு பெற்ற பிறகும் 18 ஆண்டுகள் வரை பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். முக்கியமாக பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்.

இந்நிலையில் ,இன்று காலை 11.15 மணிக்கு துணைநிலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடந்தது. கைலாஷ் நாதனுக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயரதிகாரிகள்  பங்கேற்று துணைநிலை ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

MUST READ