- Advertisement -
கர்நாடக தேர்தல்- வெற்றி யாருக்கு? வெளியான கருத்துக்கணிப்பு
கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கடந்த மார்ச் 29 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 106- 116 இடங்கள் கைப்பற்றும் என சி ஓட்டர் மற்றும் டிவி 9 கன்னடா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக 79-89 இடங்களும், மஜத 24-34 இடங்களும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.