spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅமெரிக்க அதிபர் பைடனைப் போல மோடியும் நினைவாற்றலை இழந்து இருக்கலாம் - ராகுல் காந்தி விமர்சனம்

அமெரிக்க அதிபர் பைடனைப் போல மோடியும் நினைவாற்றலை இழந்து இருக்கலாம் – ராகுல் காந்தி விமர்சனம்

-

- Advertisement -

அமெரிக்க அதிபர் பைடனைப் போல பிரதமர் நரேந்திர மோடி நினைவாற்றலை இழந்து விட்டதாக மராட்டி மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது
ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பைடனைப் போல மோடியும் நினைவாற்றலை இழந்து இருக்கலாம் - ராகுல் காந்தி விமர்சனம்

we-r-hiring

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தாராவி நிலத்தை மோடி , அமித்ஷா உள்ளிட்டோர் அவர்களது நண்பரான கௌதம் அதானிக்கு வழங்க விரும்பியதாக சென்னார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி தனது சகோதரி பிரியாங்கா காந்தி, பிரதமர் மோடியின் உரையை பார்த்து, நாம் என்ன பேசுகிறோமோ அதையே பிரதமரும் பேசுகிறார் என தன்னிடம் கூறியதாகவும், அதற்கு அமெரிக்க அதிபர் பைடனைப் போல மோடியும் நினைவாற்றலை இழந்து இருக்கலாம் என விமர்சித்துள்ளார்.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்த்த பாரதிய ஜனதா கட்சி எப்படி ‘அரசியல் சாசனத்தை’ மட்டும் பாதுகாக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

MUST READ