Homeசெய்திகள்இந்தியாநெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

-

 

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PMO

நாட்டில் புதிய ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை இன்று (செப்.24) நண்பகல் 12.30 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில், நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர், நெல்லை ரயில் நிலையத்தின் உயரதிகாரிகள் மற்றும் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்?”- தி.மு.க.வுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

அதேபோல், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தெற்கு ரயில்வேயின் உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் காணொளி மூலம் கலந்து கொண்டனர்.

சென்னை- நெல்லை, விஜயவாடா- சென்னை, உதய்ப்பூர்- ஜெய்ப்பூர், ஹைதராபாத்- பெங்களூரு, பாட்னா- ஹவுரா, ராஞ்சி- ஹவுரா, காசர்கோடு- திருவனந்தபுரம், ரூர்கேலா- புவனேஸ்வர்- பூரி, ஜாம்நகர்- அகமதாபாத் ஆகிய ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பீகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

“சோதனைகளைக் கண்டு அஞ்சும் கூட்டம் நாங்கள் அல்ல”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 01.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். சென்னையில் இருந்து பிற்பகல் 02.50 மணிக்கு புறப்படும் ரயில் நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடையும்.

நெல்லை- சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

MUST READ