இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.
பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!
உள்நாட்டில் வெங்காய தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், விலையேற்றத்தைத் தடுக்கவும் அதன் ஏற்றுமதிக்கு கடந்த 2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்திருந்தது. எனினும், தற்போது இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், பஹ்ரைன், மொரீஷியஸ் ஆகிய ஆறு நாடுகளுக்கு மட்டும் 99 ஆயிரத்து 500 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளதாக மத்திய நுகர்வோர் மற்றும் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது!
இந்த வெங்காயத்தில் பெரும் பகுதி மஹாராஷ்டிராவில் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.