கபடி விளையாடிக்கொண்டிருந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் 19 வயது மாணவர் கபடி விளையாடிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் மடகசீரா மண்டலம் அச்சம்பள்ளி தாண்டாவை சேர்ந்த தனுஜா நாயக் (19) என்ற மாணவர் அனந்தபூரில் உள்ள பி.வி.கே.கே கல்லூரியில் பார்மசி படித்து வந்தார். கடந்த 1ம் தேதி கல்லூரி மைதானத்தில் நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது தனுஜா நாயக் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை பெங்களூரு எம்.எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை தனுஜா நாயக் உயிரிழந்தார். 19 வயது பார்மசி மாணவர் விளையாடிக்கொண்டிருந்து மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.