Homeசெய்திகள்இந்தியாஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O ஆட்சி - சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O ஆட்சி – சந்திரபாபு நாயுடு

-

- Advertisement -
kadalkanni

 

ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O ஆட்சி - சந்திரபாபு நாயுடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் காயத்ரி நிலையம் விருந்தினர் மாளிகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில் அவர் பேசுகையில் ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O ஆட்சி தொடங்கியுள்ளது.ஆந்திராவில் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. அதனை மீண்டும் மாற்ற வேண்டுமென 93 சதவீதம் மக்கள் என்னை வெற்றி பெற செய்துள்ளனர்.

ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O ஆட்சி - சந்திரபாபு நாயுடு

எனது ஆட்சி நிர்வாகத்தால் ஆந்திராவின் நிதி வளர்ச்சி அடைய செய்யும் வழிமுறைகளை கொண்டு வருவேன். தெலுங்கு மக்களின் உயிர் நாடியான போலவரம் திட்டம்,  அமராவதி தலைநகர் -ல் செயல்படுத்தப்படும் . 2047ல் இந்தியா உலகின் நம்பர்-1 ஆக இருக்கும் அதில் ஆந்திரா முதன்மை இடத்தில் இருக்க வேண்டும் என்பதே எனது விஷன். நாட்டில் ஒரு நாளைக்கு ரூ. 100 க்கு என ஏழ்மை ஒருப்புறம் இருக்க லட்சம் கோடிகளில் வசதிப்படைத்தவர்கள் ஒருப்புறம் உள்ளனர். சமூகத்தில் இந்த ஏற்றத்தாழ்வு இல்லாத வறுமையில்லா சமுதாயமாக மாற்றிமாநிலத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும்.

போலி ஆவணம் தயாரித்த வழக்கு – பாஜக நிர்வாகி கைது

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை போக்க இரண்டாம்  தலைமுறை சீர்திருத்தங்களை அப்போது ஐதராபாத்தில் நான் கொண்டு வந்தேன்.  அதன் விளைவு சர்வதேச நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஹைதராபாத்தில் அமைத்தனர் .அதன் காரணமாக தெலுங்கானா மாநிலம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதேபோன்று ஆந்திராவிலும் சர்வதேச நிறுவனங்கள் கொண்டு வரும் விதமாக செயல்படுத்தி ஆந்திராவில் முதன்மை இடத்திற்கு கொண்டு வருவேன்.

ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O ஆட்சி - சந்திரபாபு நாயுடு

ஐந்து கோடி ஆந்திரர்களின் சேவகன் நான் தெலுங்கு மக்களின் குடும்ப தலைவனாக  அனைவருக்கும் சொந்தமானவன். இஸ்லாமியர்களுக்கு மெக்கா,  கிறிஸ்தவர்களுக்கு வாடிகன் நகரம் எப்படி இருக்கிறதோ இந்துக்களுக்கு திருமலை புனித தலமாகும். எனவே உலகில் உள்ள இந்துக்கள் வழிபடும் தெய்வமாக திருமலை மாற்றப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்  பல சீர்திருத்தம் கொண்டு வந்து தூய்மையாக வைத்திருந்தோம்.  ஆனால் அதனை கடந்த ஐந்தாண்டுகளில் கஞ்சா, மாமிசம், மது என அரசியல் கூடாரமாக மாற்றி விட்டனர்.

பிரசாதங்கள் தரத்தையும் இழந்துள்ளது, பலமுறைகேடுகள் நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள், பழிவாங்கும் அரசியலாக இருக்காது .அதே நேரத்தில் தவறு செய்தவர்களை அப்படியே விட்டுவிட்டால் அந்த தவறுக்கு இந்த அரசும் துணை போனதாக மாறிவிடும் எனவே அதற்கு ஏற்ப சட்டரீதியாக நடவடிக்கை இருக்கும். புனிதத் தலமான திருமலையில் கோவிந்தநாமத்தைத் தவிர வேறு எதுவும் கேட்கக் கூடாது. செம்மரக் கடத்தல்காரனுக்கு ஒய்.எஸ்.ஆர்.சி.பி., தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தனர்.  அதிலிருந்தே அவர்கள் யாருக்கு துணை போகிறார்கள் என்று தெரிகிறது என்றார்.

MUST READ