Homeசெய்திகள்இந்தியாபாஜக அரசு இந்தியாவை மணிப்பூரில் கொன்றுவிட்டது- ராகுல்காந்தி

பாஜக அரசு இந்தியாவை மணிப்பூரில் கொன்றுவிட்டது- ராகுல்காந்தி

-

பாஜக அரசு இந்தியாவை மணிப்பூரில் கொன்றுவிட்டது- ராகுல்காந்தி

நீங்கள் அனைவரும் மணிப்பூரில் பாரத மாதாவை கொலை செய்த கொலைகாரர்கள், நீங்கள் யாரும் தேச பக்தர்கள் அல்ல என மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

Image

இது தொடர்பாக மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, “கடந்தமுறை நான் பேசியபோது உங்களுக்கு நிறைய தொல்லைகள் கொடுத்திருக்கிறேன், ஏனெனில் நான் அதானி பற்றி பேசினேன். உங்களுடைய மூத்த தலைவர்கள் இதனால் கவலை அடைந்திருப்பார்கள். அந்த வலியும், கவலையும் உங்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஆனால் நான் உண்மையை தான் பேசுகிறேன். இன்று பாஜகவினர் எதற்கு பயப்பட வேண்டாம், ஏனெனில் நான் அதானி பற்றி இன்று பேசமாட்டேன். மக்கள் என்னிடம் எதற்காக பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கினீர்கள் என்று பொதுவாக கேட்பார்கள். எனக்கே அதை ஏன் தொடங்கினேன் என்று தெரியாது. இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் புரிந்துக்கொள்ள தான் யாத்திரையை தொடங்கினேன் என்பதை பின்னர் தான் உணர்ந்தேன். கடற்பகுதி முதல் காஷ்மீர் மலை பகுதி வரை சென்றேன். நடைபயனத்தின் போது அனைத்து மக்களின் குரல்களையும் கேட்டறிந்தேன். நான் இன்று பேச தொடங்கிய உடன், வெறுப்புடன் சிலர் பேச தொடங்கினார்கள்.

இந்த வெறுப்புணர்வை நீக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என் மனதிற்குள் இருந்த வெறுப்பை எல்லாம் அகற்றிவிட்டு, அன்பை தான் நிறைத்து வைத்துள்ளேன். பாரத் ஜோடோ யாத்திரையின் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். உண்மையான இந்தியாவை இந்த நடைபயணத்தின் மூலம் தான் பார்த்தேன். பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கியபோது எனக்கு மூட்டு வழி அதிகரித்தது. முன்பு நான் 10 கி.மீட்டர் ஓடுவேன், அதனால் 25 கி.மீ நடப்பது பெரிய விஷயம் அல்ல என்று நினைத்தேன். என்னிடம் ஆணவம் இருந்தது, ஆனால் இந்தியா ஆணவத்தை ஏற்காது. அதனால் 10 கி.மீ என்னால் நடக்க முடியும் எனில், 25 கி.மீ கூட நடக்க முடியும் என்று நம்பினேன். ஆனால் 2 நாட்களிலேயே எனக்கு மூட்டு வழி அதிகரித்தது. நரி போல இருந்த நான், சிறு எறும்பு போல காட்சியளித்தேன். அகங்காரத்துடன் இருந்தேன், ஆனால் அது இந்தியாவில் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்துக்கொண்டேன். ஒருநாள் ஒரு பெண் எனக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அதில் ராகுல் உங்களுடன் நானும் நடந்தேன், எனக்கு இப்போது நம்பிக்கை வந்திருக்கிறது என்று கூறியிருந்தார். மக்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்துவது தான் என் யாத்திரையின் நோக்கம் என்பதை அப்போது தான் உணர்ந்தேன். மணிப்பூர் இன்று மணிப்பூராகவே இல்லை.

Rahul

சில நாட்களுக்கு முன்பு நான் மணிப்பூர் சென்றிருந்தேன். ஆனால் பிரதமர் இன்னும் மணிப்பூர் செல்லவில்லை, ஏனெனில் அவரை பொறுத்தவரை மணிப்பூர் இந்தியாவிலேயே இல்லை. மாநிலத்தை இரண்டாக பிரித்திருக்கிறார்கள். மணிப்பூரை உடைத்து, பிளவுப்படுத்தி இருக்கிறீர்கள். மணிப்பூரை மட்டும் இல்லை, பாரத தாயையும் அவர்கள் மணிப்பூரில் கொலை செய்திருக்கிறார்கள். மணிப்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் அவர்கள் தங்கியுள்ள முகாம்களில் சந்தித்து பேசினேன். ஆனால் பிரதமர் அதை இன்றுவரை செய்யவில்லை. அங்கிருந்த பெண்ணிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் தன்னுடைய சிறு வயது மகனை தன் முன்னாலேயே சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.

என் மகனின் உடலோடு தான் நான் இரவு முழுவதும் படுத்திருந்தேன் என்று கூறினார். இன்னொரு முகாமில் ஒரு பெண் மிகுந்த பயத்தோடு, மயக்கத்தில் இருந்தார். அவரிடமும் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தேன். நீங்கள் அனைவரும் துரோகிகள். நீங்கள் தேசியவாதிகள் இல்லை. மணிப்பூரில் இந்தியாவை கொன்று குவித்ததால் தான் பிரதமர் மோடி மணிப்பூருக்கே செல்லவில்லை. நீங்கள் அனைவரும் பாரத மாதாவின் கொலைகாரர்கள். நீங்கள் தேச பக்தர்கள் அல்ல. இலங்கை தீப்பற்றி எரிய அனுமன் காரணமில்லை, ராவணனின் அகங்காரம் தான் இலங்கையை எரித்தது. ராவணன் அகங்காரத்தோடு மேகநாதன் மற்றும் கும்பகர்ணன் ஆகியோரின் பேச்சை கேட்பான், அதுபோல தான் இன்றைய பிரதமர் மோடி அதானி மற்றும் அமித்ஷாவின் பேச்சை கேட்டுக்கொண்டு இருக்கிறார். ராவணன் போல பிரதமர் மோடி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

MUST READ