Homeசெய்திகள்இந்தியாபாரத் மண்டபத்தில் தேங்கிய மழைநீர்.. வெற்று வளர்ச்சி அம்பலமானதாக காங். விமர்சனம்..

பாரத் மண்டபத்தில் தேங்கிய மழைநீர்.. வெற்று வளர்ச்சி அம்பலமானதாக காங். விமர்சனம்..

-

டெல்லியில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டிற்காக ₹2,700 கோடி செலவில் அமைக்கப்பட்ட பாரத் மண்டபத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் “பாஜக அரசின் வெற்று வளர்ச்சி அம்பலமானது” என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ஜி20 கூட்டமைப்பு கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, சவுதி, தென்கொரியா, மெக்ஸிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் ஆகும். இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டுக்கான 18வது உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது.

பாரத் மண்டபத்தில் தேங்கிய மழைநீர்.. வெற்று வளர்ச்சி அம்பலமானதாக காங். விமர்சனம்..

இதற்காக டெல்லி பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரத் மண்டபம் ரூ. 2,700 கோடியில் தயார் செய்யப்பட்டது. நேற்று ( செப்.9) நடைபெற்ற முதல்நாள் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஜி20 உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த மாநாட்டிற்காக பெரும் பொருட்செலவில் தாயார் செய்யப்பட்ட பாரத் மண்டபத்தில் , மழைநீர் தேங்கியுள்ளது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ரூ.2,700 கோடி செலவில் அமைக்கப்பட்ட பாரத் மண்டபம் ஒருநாள் மழைக்கே தாக்கு பிடிக்கவில்லை என்றும், இதன்மூலம் பாஜக அரசின் வெற்று வளச்சி அம்பலமாகியுள்ளதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

MUST READ