spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாராஜஸ்தானில் வலிமை பெறுமா காங்கிரஸ்?

ராஜஸ்தானில் வலிமை பெறுமா காங்கிரஸ்?

-

- Advertisement -

 

 

we-r-hiring
ராஜஸ்தானில் வலிமை பெறுமா காங்கிரஸ்?
Photo: INC

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் எதிரும் புதிருமாகச் செயல்பட்டு வந்த முதலமைச்சர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதலமைச்சருமான சச்சின் பைலட் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

பதக்கங்களை கங்கையில் வீசுவோம்- மல்யுத்த வீரர்கள்

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. அந்த உற்சாகத்தில் அடுத்தடுத்து நடைபெற உள்ள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான பணிகளில் காங்கிரஸ் கட்சித் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டையும், முன்னாள் துணை முதலமைச்சரும், அதிருப்தி ஆதரவாளருமான சச்சின் பைலட்டையும் டெல்லிக்கு வரவழைத்த கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, தனது தரப்பில் சில நிபந்தனைகளை சச்சின் பைலட் கட்சித் தலைமையிடம் முன் வைத்ததாகக் கூறப்படுகிறது.

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி!

சுமார் நான்கு மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் இணைந்து செயல்பட சச்சின் பைலட்டும், அசோக் கெலாட்டும் இணைந்து செயல்பட சம்மதித்ததாகத் தெரிவித்தனர்.

ராஜஸ்தானில் வலிமை பெறுமா காங்கிரஸ்?
Photo: INC

அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் ஒரே கட்சியில் இருந்தாலும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய பா.ஜ.க. ஆட்சி மீதான முறைகேடுகளை விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்காவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு சச்சின் பைலட் கெடு விதித்திருந்தார். அதேபோல், ஆளும் அரசுக்கு எதிராக நடைப்பயணமும் அசோக் கெலாட் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ