Homeசெய்திகள்இந்தியாடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2022-ல் கடும் சரிவு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2022-ல் கடும் சரிவு

-

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82.75 ஆக சரிந்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து வர்த்தக பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில் தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்த வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும்போது இறக்குமதி அதிகரிக்கும். கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் 56.29 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்த இறக்குமதி, 2022 செப்டம்பரில் 59.35 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஏற்றுமதியை பொறுத்த அளவில், 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 33.81 பில்லியன் டாலராக இருந்தது. 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த ஏற்றுமதி 3.52 சதவிகிதமாக குறைந்து 32.62 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022 ஆம் ஆண்டின் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74 ரூபாய் 33 காசுகளாக இருந்த நிலையில் தற்போது 82 ரூபாய் 74 காசுகளாக சரிந்துள்ளது. ரூபாயின் மதிப்பு ஒரே ஆண்டில் 10% சதவிதத்திருக்கும் மேல் சரிவை சந்தித்திருப்பது 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

MUST READ