spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமுழு அடைப்பு எதிரொலி…தமிழ்நாடு பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தம்…

முழு அடைப்பு எதிரொலி…தமிழ்நாடு பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தம்…

-

- Advertisement -

முழு அடைப்பு காரணமாக கேரளாவில் பல இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  முழு அடைப்பு எதிரொலி…தமிழ்நாடு பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தம்…ஒன்றிய அரசின் தொழிலாளர் வரைமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து அழைப்பு விடுத்த இந்தப் போராட்டம் காரணமாக அங்குள்ள இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்துக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக களியக்காவிளை எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டதால், கேரளாவுக்கு அவசர தேவைகளுக்காக பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். மாற்று போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததால், சிலர் தங்கள் பயணத்தை ஒத்திவைத்ததாகவும் கூறப்படுகிறது. முழு அடைப்பு காரணமாக கேரளாவில் பல இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது

பிப்.14-ல்  தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு

MUST READ