spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகுழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற தீர்ப்பு ரத்து - உச்சநீதிமன்றம்

குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற தீர்ப்பு ரத்து – உச்சநீதிமன்றம்

-

- Advertisement -

குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற தீர்ப்பு ரத்து - உச்சநீதிமன்றம்குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம்.

கடந்த மார்ச் மாதம் , குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

we-r-hiring

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக்கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ‛‛குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, என்றுக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும். இது கொடுமையானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். இளைஞர் மீது பதிவான வழக்கு ரத்து தொடர்பாக தமிழக போலீசாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இன்ஸ்டாவில் பதிவிட்டு பெண் தற்கொலை – காதல் பிரச்சனையா? போலீஸ் விசாரணை

தற்போது குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. “குழந்தைகள் ஆபாச படம் என்பதற்கு பதிலாக Child Sexual and Exploitative and Abuse Material” பயன்படுத்தும் வகையில் அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. குழந்தைகள் ஆபாச படம் என்ற சொல்லாடலை உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் போக்சோ சட்டத்தின் படி குழந்தைகள் சார்ந்த ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

MUST READ