spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சிறையிலிருந்து தப்பி ஓட்டம் பிடித்த ஆயுள் தண்டனை கைதி! போலீசார் வலைவீச்சு…

சிறையிலிருந்து தப்பி ஓட்டம் பிடித்த ஆயுள் தண்டனை கைதி! போலீசார் வலைவீச்சு…

-

- Advertisement -

கேரள மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பியோடிய கைதி கோவிந்தசாமியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனா்.சிறையிலிருந்து தப்பி ஓட்டம் பிடித்த ஆயுள் தண்டனை கைதி! போலீசார் வலைவீச்சு…கேரள மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் கோவிந்தசாமி என்ற ஆயுள் தண்டனை கைதி அடைக்கப்பட்டு இருந்தார் இவர் இன்று அதிகாலை ஒரு மணிக்கு மேல் சிறை கம்பிகளை முறித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இன்று காலை கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் செல்களை சோதனையிட்டபோது கோவிந்தசாமி தப்பியதை போலீசார் கண்டறிந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போலீசார் உயரமான மதில் சுவரில் பெட்ஷீட் உள்ளிட்ட துணிகளை பயன்படுத்தி ஜெயிலிலிருந்து தப்பி இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரளா முழுவதும் தப்பி ஓடிய கோவிந்தசாமியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.சிறையிலிருந்து தப்பி ஓட்டம் பிடித்த ஆயுள் தண்டனை கைதி! போலீசார் வலைவீச்சு…மேலும் கேரள மாநிலத்தில் இருந்து கர்நாடகா மற்றும் தமிழகத்துக்கு வரக்கூடிய எல்லை பகுதிகளிலும் ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனைகள் நடத்தப்படுகிறது. பயணிகளிடத்தில் குற்றவாளி தப்பிய விஷயம் குறித்து போலீசார் தகவல் தெரிவித்து, எங்கு பார்த்தாலும் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அவருடைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். கண்ணூர் மத்திய சிறையில் இருந்து குற்றவாளி தப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வருகிற தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டி பெறுவது உறுதி – வைகோ

MUST READ