Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கோடையில் ஜில்லுனு சுவையான மாம்பழ ஐஸ் கிரீம்..

கோடையில் ஜில்லுனு சுவையான மாம்பழ ஐஸ் கிரீம்..

-

மாம்பழ சீசனில் அடிக்கிற வெயிலுக்கு  ஜில்லுனு மாம்பழ ஐஸ் கிரீம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாம்பழம்  – 4

பால் – 1/2 லிட்டர்

வென்னிலா ஐஸ் க்ரீம் -2 கப்

ஜெல்லி – 3 ஸ்பூன்

மாம்பழ ஐஸ் கிரீம்

செய்முறை:

  • முதலில் பாலை சுண்டக்காய்ச்சிக் கொள்ளவும். காய்ச்சிய பாலை ஆற விடவும்.
  •  மாம்பழ தோலினை நீக்கிவிட வேண்டும். மாம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை மிக்ஸி ஜாரில் போட்டு கூழ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு  குளிர வைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • பின்பு மாம்பழ கூழினை  சேர்த்து நன்றாக கலந்து  சிறு சிறு  டீ கோப்பைகளில் ஊற்றி அதன் மேல் மூடிப் போட்டு அதனை ஃப்ரிட்ஜில் சுமார் 6 மணி நேரம் வைத்து குளிற விடவும்.
  • பிறகு வெளியே எடுத்து வெண்ணிலா கிரீம் சேர்த்தால்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி  சாப்பிடும்  மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி..

MUST READ