spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தமிழகத்தில் 17.5% இளைஞர்களுக்கு வேலையின்மை - அண்ணாமலை

தமிழகத்தில் 17.5% இளைஞர்களுக்கு வேலையின்மை – அண்ணாமலை

-

- Advertisement -

தமிழ்நாட்டில் 15 முதல் 29 வயதுள்ள இளைஞர்களில் 17.5 சதவீதம் பேருக்கு வேலையில்லை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் 17.5% இளைஞர்களுக்கு வேலையின்மை - அண்ணாமலைதமிழக அரசு மக்களை முட்டாள் ஆக்குவதற்காக மற்ற மாநிலங்களின் மின் கட்டணத்தை ஒப்பீடு செய்து காட்டுகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் 221வது வாக்குறுதியாக மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்கள். அதனை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். அதனை நடைமுறைப்படுத்தினால், ஒவ்வொரு குடும்பமும் பெருமளவு மின்கட்டணத்தை மிச்சப்படுத்தும்.

we-r-hiring

வேலையில்லா பட்டதாரிகள்

அண்டை மாநிலங்களில் மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிக்கும்போது, அங்குள்ள மின்கட்டணத்தை தமிழகத்துடன் ஒப்பீடு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் 15 முதல் 29 வயதுக்குள் உள்ள வேலையில்லாத பட்டதாரிகள் விகிதம் 17.5 சதவீதமாக உள்ளது. ஆனால் குஜராத்தில் 6.1 சதவீதம், கர்நாடகா, மஹாராஷ்டிராவில், 7, 8 சதவீதமாக தான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் 17.5 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதை திமுக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆரம்ப காலத்தில் சீன மூங்கில் செடிக்கு தண்ணீர் ஊற்றினால் வளராது; வேர்கள் தான் பலமாகும். 90 நாட்களுக்கு பிறகு செடி வேகமாக வளரும். அதுபோல இப்போது பா.ஜ.கவின் வேர் பலமாகி வருகிறது. வளர்ச்சி வெளியே தெரியவில்லை என்று நினைத்து தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தக்கூடாது. எனது செயல்பாடுகள் பா.ஜ.கவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சில நேரம் ஒரு கால் பின்னோக்கி வைத்துத்தான் ஆக வேண்டும். எடுத்தவுடன் 5வது கியரில் சென்றால் வண்டி ஓடாது.

பா.ஜ.கவில் சேர பொறுமை, சகிப்புத்தன்மை, சமரசம் ஆகிய மூன்றும் அவசியம். பா.ஜ.க வை பலர் குறை சொல்வார்கள், அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.,வின் வேரை நாம் வலுவாக்கிக் கொண்டிருக்கிறோம். கடந்த தேர்தலில் 8 ஆயிரம் பூத்களில் பா.ஜ., முதலிடம் பெற்றிருக்கிறது. வேர் வலுவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்

MUST READ