சேலத்தில் தவெக கூட்டத்தை ஒட்டிய நிகழ்வில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தகவல் சேகரிக்க தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஷெர்ரி சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தார். அப்போது, உயிரிழந்த சூரஜின் குடும்பத்தினரிடம் பேட்டி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தவெக மாவட்டச் செயலாளர் பார்த்திபனுடன் வந்த கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினரிடம் எந்தவித பேட்டியும் எடுக்கக்கூடாது எனத் தடை விதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தவெக நிர்வாகி ஒருவர் செய்தியாளர் ஷெர்ரியின் சட்டையைப் பிடித்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், செய்தி நிறுவனத்தின் காரின் மீது ஏறி அத்துமீறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்த மற்ற செய்தியாளர்களையும் சிலர் தாக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தியாளருக்கு எதிரான தாக்குதல் முயற்சியை கண்டித்து அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள், சம்பவ இடத்திலேயே தவெக நிர்வாகியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடகம் போடும் விஜய்! நடுங்க வைக்கும் உண்மைகள்! எஸ்.பி.லட்சுமணன் உடைக்கும் பகீர் பின்னணி!


