spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அழிவு பாதையை நோக்கி அதிமுக - பண்ருட்டி ராமச்சந்திரன்

அழிவு பாதையை நோக்கி அதிமுக – பண்ருட்டி ராமச்சந்திரன்

-

- Advertisement -

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தொண்டர்கள் புறக்கணியுங்கள், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து அழிவு பாதையை நோக்கி செல்கிறது என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பன்னீர் செல்வத்தின் அரசியல் ஆலோசகர், தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்,

we-r-hiring

அதில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை திடீரென அறிவித்து இருக்கிறார். இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது.
ஒரு தேர்தல் என்றால் வாக்காளர் பட்டியல், வேட்பாளருக்கு கால அவகாசம் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். திடீர் சாம்பர், ரசம் போன்று இந்த தேர்தலை அறிவித்துள்ளார்.

தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சட்ட விதிகளை மாற்றி தேர்தலை அறிவித்துள்ளது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தியுள்ளது. அதிமுக ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். எங்களை பொறுத்தவரை வேதனையாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக, சட்டரீதியாக சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அனைத்து நிர்வாகிகளுடன் ஒன்றுபட்ட வேண்டும். அதற்கு மாறாக
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எண்ணத்திற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சீர்குலைக்கும் வகையில் செயல்படுகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பாடம் கற்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து அழிவு பாதையை நோக்கி செல்கிறது. இவர்கள் திருந்துவார்கள் என்றோ, இணைவார்கள் என்றோ நாங்கள் நினைக்க வில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்த அனுமதி தந்தோம். இரட்டை இலை சின்னத்தை தந்தோம். ஆனால் இடைத்தேர்தலில் படுதோல்வியை அதிமுக சந்தித்து இருக்கிறது.

பிரேக் இல்லாத வண்டியை போல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் செல்கிறார்கள். சட்ட, நீதி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். இனிமேல்,
எடப்பாடி பழனிச்சாமி தரப்பை நாங்கள் பொறுப்படுத்த போவதில்லை, கவலைப்பட போவதில்லை. அதிமுக என்ற விளை நிலத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தொண்டர்களை சந்திப்போம்.

அதிமுக சிறுபான்மை கூட்டத்தில் சிக்கி தவிக்கிறது. அதிமுக தொண்டர்கள் இந்த தேர்தலை புறக்கணியுங்கள். தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்கு இருக்கிறது.

நாங்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம், நீதிமன்றத்தை நாடுவோம். எடப்பாடி தரப்பினர் விளையாட்டு பிள்ளைகள். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு அதிமுகவின் சட்ட விதிகள், கட்சிக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா செய்த தியாகங்கள் பற்றி தெரியாது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது ஏற்புடையது இல்லை. எனவே, எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் நடந்த தகுதியில்லை.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தலைமை ஏற்றபிறகு தொண்டர்கள் அதிகமாக வில்லை, குண்டர்கள் அதிகமாகி விட்டார்கள்.

சசிகலா, டிடிவி தினகரன் தனித்தனியாக செயல்படுகிறார்கள். அனைவருக்கும் ஒரேநேரத்தில் சிந்தித்தால் மட்டுமே அதிமுகவில் ஒன்றிணைய முடியும்
என அவர் கூறினார்.

MUST READ