பாஜக ஊழல் செய்ததாக செய்தித்தாள்களில் காங்கிரஸ் விளம்பரம் செய்ததாக தொடர்ந்த வழக்கில் ராகுலுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டதில் பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரனார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அவதூறு வழக்கை பதிவு செய்து வந்தது. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இன்று காலை பெங்களூருக்கு ராகுல்காந்தி வந்துள்ளார்.
அவரை முதலமைச்சர் சீத்தராமய்யா, துணை முதலமைச்சர் சிவக்குமார் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளனர்.
கர்நாடகாவில் 2019 முதல் 2023 வரை நடந்த பாஜக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக கூறி அம்மாநில சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் விளம்பரம் செய்தது.குறிப்பாக முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடி, அமைச்சர் பதவிக்கு ரூ.500 கோடி நிர்ணயம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கொரோனாவை தடுக்கும் உபகரணங்களுக்கான டென்டர் விவகாரத்தில் 75 சதவீதம் கமிஷன், பொதுப்பணித்துறை டென்டரில் 40 சதவீத கமிஷன், மதம்சார்ந்த அமைப்புகளுக்கு 30 சதவீத மானியம் வழங்கியது என குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
இதுதொடர்பாக பத்திரிகைகளிலும் காங்கிரஸ் சார்பில் விளம்பரமும் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி முதல்வருக்கு நேரடியாக ஊழல் பணத்தை கொடுக்க அரசு 40% ஊழல் செய்ததாக தேர்தல் பிரச்சாரத்தில் முதன்மை குற்றச்சாட்டாக எடுத்து வைத்தனர். இந்தப் பிரச்சாரத்திற்கு எதிராக பாஜக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது. அவதூறு வழக்கில் ராகுல் காந்தி, சித்தராமையா, டி. கே சிவகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
கடந்த ஜூன் 2-ம் தேதி இதே வழக்கில் முதல்வர் சித்தராமையா துணை முதல்வர் டி .கே சிவகுமார் ஆகியோர் 42 வது குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக இரண்டு முறை கால அவகாசம் கோரப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் கடைசி சம்மனை அடுத்து இன்று ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.
இதனை தொடர்ந்து பாஜக ஊழல் செய்ததாக செய்தித்தாள்களில் காங்கிரஸ் விளம்பரம் செய்ததாக தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுலுக்கு பெங்களூரு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.