spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி ...

பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி தான் – வைகை செல்வன்

-

- Advertisement -

அதிமுக மிகப்பெரிய இயக்கம் எங்களை நாடி தான் மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பேட்டியளித்துள்ளாா்.பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில்  NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி  தான் - வைகை செல்வன்மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை திருவொற்றியூரில் 38 இடங்களில் நலத்திட்ட உதவிகள் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுங்கச்சாவடி திருவொற்றியூர் பெரியார் நகர் மணலி எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சரும் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகைச் செல்வன், “அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பாஜக உடைய கூட்டணி குறித்து மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் அன்னதான நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில்  NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி  தான் - வைகை செல்வன்பல்வேறு கூட்டணிகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மிக விரைவில் அந்த கூட்டணியுடைய முடிவையும் தொகுதிகளையும்  பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவிப்பார். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இந்த தேர்தலுக்காக தயாராக இருக்கிறது.

we-r-hiring

பொதுக்குழு செயற்குழு கூட்டத்திற்கு  பிறகு கூட்டணி இன்னும் வலிமைப்படுத்துவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு கட்சிகள் கூட்டணியில் வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது மிக விரைவில் தெரியவரும். தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை இல்லை. தவெக நேற்று தொடங்கிய கட்சி அதன் நிலைப்பாடு விரைவில் தெரியும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய இயக்கம் எங்களை நாடிதான் தான் மற்ற கட்சிகள் வருவார்கள். யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று மிக விரைவில் தெரியவரும் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. இந்தியா முழுவதும்  பாஜக ஆளுகின்ற  இடங்களில் மத மோதல்கள் இல்லை ஜாதி கலவரங்கள் இல்லை பிரச்சனைகள் எழவில்லை.

அதேபோல தான் தமிழ்நாட்டிலும் 2017 இல் இருந்து 4 ஆண்டு காலம் அதிமுக  பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது தான்  நல்லாட்சியை தந்துள்ளது. பாஜக தேசிய கட்சியாக இருக்கலாம் இந்தியாவையே ஆண்டு கொண்டிருக்கின்ற இயக்கமாக இருக்கலாம். ஆனால் என்டிஏ கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தாங்குவது எடப்பாடி யார் தான்” என்று வைகைச் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்!! காவலர் பணியிடை நீக்கம்…

MUST READ