Homeசெய்திகள்அரசியல்ஜெயலதிதா பெயரை பயன்படுத்தாமல் பாஜக வளராது

ஜெயலதிதா பெயரை பயன்படுத்தாமல் பாஜக வளராது

-

பாஜக தமிழகத்தில்  வளர்ச்சி அடைய ஜெயலலிதா பெயரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு, தங்களது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கொள்கைகளைப் பற்றி மட்டும் பேசி கட்சியை வளர்ச்சி அடைய செய்ய தயாரா ? முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி.ஜெயலதிதா பெயரை பயன்படுத்தாமல் பாஜக வளராதுமதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த குண்ணத்தூரில் உள்ள மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா திருஉருவச் சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில், 200க்கும் மேற்பட்ட இளைஞர்களை அதிமுக-வில் இணைக்கும் விழா நடைபெற்றது.

https://www.apcnewstamil.com/news/chennai/chennai-metropolitan-police-erects-automatic-camera-barrier-fences/88017

அதனை தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில், பாஜக தலைவர் அண்ணாமலை தங்களது கட்சியை வளர்ச்சி அடைய ஜெயலலிதா பெயரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு, பாஜக கட்சியினுடைய கொள்கைகளையும், கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை பற்றி பேசி தமிழக மக்களுடைய நம்பிக்கையை பெற்று, தமிழகத்தில் பாஜக-வை வளர்ச்சி அடைய செய்ய தயாராக இருக்கிறாரா? எனவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா பெயரை பேசி வருவதால் எந்த தாக்கமும் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.

MUST READ