spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பாஜக 140 இடங்களை தாண்டாது - அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

பாஜக 140 இடங்களை தாண்டாது – அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

-

- Advertisement -

பாஜக 140 இடங்களை தாண்டாது – அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

we-r-hiring

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன் கார்க்கே வீட்டில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பாஜக 140 இடங்களை தாண்டாது - அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே வீட்டில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

திமுக சார்பில் டி.ஆர்.பாலு, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சரத் பாவர், சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள டெல்லி வந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், பாஜக 140 இடங்களை தாண்டாது என்று தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று உறுதியுடன் தெரிவித்தார்.

MUST READ