இன்று சென்னை பனையூர் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 15 மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஒரு சில மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பதவிக்கு போட்டி நீடித்து வருவதால் மாவட்ட செயலாளர்களிடம் பேசி பிரச்சினைகளை விஜய் தீர்க்க இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல். ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள குறிப்பிட்ட சில ( 10-க்கும் மேற்பட்ட) மாவட்ட செயலாளர்களுக்கு மற்றும் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று முதற்கட்ட ஆலோசனை சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

வட்டம், ஒன்றியம், அணி தலைவர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மாவட்ட தலைவர்கள் பணம் வசூலித்தால் மாவட்டத் தலைவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படாது என தவெக தலைவர் விஜய் எச்சரித்துள்ளார். பொறுப்பாளர்கள் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படாது எனவும் தவெக தலைவர் விஜய் எச்சரித்துள்ளார்.
வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி தவெக-வின் ஓராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா என்பதால் அது குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இன்று நடைபெறக்கூடிய மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பிறகு முதற்கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளது.
1 . வடசென்னை
2 . மத்திய சென்னை
3 . அரியலூர்
4 . ராணிப்பேட்டை
5 . கடலூர்
6 . புதுக்கோட்டை
7 . தென் சென்னை ,ஆகிய மாவட்ட செயலாளர்கள் பனையூர் அலுவலகத்திற்கு வருகை.
ஆவடி அருகே பிரபல காலணி ஷோரூமில் தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்