Homeசெய்திகள்அரசியல்திமுக கூட்டணி: தொகுதிப் பங்கீடு நிறைவு - இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் முதல்வர்...

திமுக கூட்டணி: தொகுதிப் பங்கீடு நிறைவு – இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் அடுத்தக்கட்ட நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றன. ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டினை நிறைவுசெய்துள்ளது. இதன் தொடரச்சியாக இன்று மாலை யார் யாருக்கு எந்த தொகுதிகள் குறித்தான முழுவிவரங்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

திமுக கூட்டணி: தொகுதிப் பங்கீடு நிறைவு - இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

we-r-hiring

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு இன்றுடன் (மார்ச் 28, 2026) முழுமையாக நிறைவடைந்தது.

​இதனைத் தொடர்ந்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த முழுமையான விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்.

 சிபிஎம் உடன் உடன்பாடு:
முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வதில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இறுதிப்பக்க பேச்சுவார்த்தையில், சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பெ.சண்முகம் பேட்டி:
​பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ஐந்து தொகுதிகளுக்கான இடங்களை இறுதி செய்துள்ளதாகத் தெரிவித்தார். மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கூட்டணி நிலவரம்:
திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இதர தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், இன்று மாலை வெளியாகவுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் தேமுதிக: தொகுதிகளை இறுதி செய்வதில் நீடிக்கும் இழுபறி!

MUST READ