Homeசெய்திகள்அரசியல்திமுக கூட்டணி கட்சிகளை தான் முன்னிருத்துகிறது, அவர்களுக்கென்று சொந்த பலம் கிடையாது - கே.பி.முனுசாமி பேச்சு

திமுக கூட்டணி கட்சிகளை தான் முன்னிருத்துகிறது, அவர்களுக்கென்று சொந்த பலம் கிடையாது – கே.பி.முனுசாமி பேச்சு

-

திமுக கூட்டணி கட்சிகளை தான் முன்னிருத்துகிறது, அவர்களுக்கென்று சொந்த பலம் கிடையாது - கே.பி.முனுசாமி பேச்சு

திமுக தன்னுடன் இருக்கும் 11 கூட்டணி கட்சிகளை தான் முன் நிறுத்துகிறது . ஆனால் அதிமுக.,வுக்கு கூட்டணியை பற்றி கவலை இல்லை –  கிருஷ்ணகிரியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு.

கிருஷ்ணகிரியில் அதிமுக.,வின் கிழக்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக.,வினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என பேசினார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், திமுக கூட்டணியை நம்பி உள்ளது. ஆனால் அதிமுக.,வுக்கு கூட்டணியை பற்றி கவலை இல்லை. இது வலிமையான தொண்டர்களை கொண்ட இயக்கம், நாங்கள் எங்கள் தலைவனின் (எடப்பாடி பழனிச்சாமி) தகுதியின் அடிப்படையில் வாக்கு கேட்போம். எம்.ஜி.ஆர் மனித நேயம் மிக்க தலைவர் அவரின் அரசியல் வாரிசு ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இந்த மாநிலத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கினார்.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சாதாரண விவசாயி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் அதிமுக.,வின் புகழை காப்பாற்ற தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். அவரை முன்னிருத்தி நாம் மக்களை சந்திக்கிறோம். ஆனால் ஸ்டாலின் தன்னை முன்னிருத்தவில்லை 11 கூட்டணி கட்சிகளை முன்னிருத்தி தான் உள்ளார் என பேசி இருக்கிறார்.

MUST READ