spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திமுகவுடன் இணைகிறதா மதிமுக? முழு பின்னணி

திமுகவுடன் இணைகிறதா மதிமுக? முழு பின்னணி

-

- Advertisement -

திமுகவுடன் இணைகிறதா மதிமுக? முழு பின்னணி

மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுமாறு அக்கட்சி அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியிருந்த நிலையில், துரைவைகோ அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

Representational Image

மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில், “மதிமுகவை தாய் கட்சியான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது. மகனை ஆதரித்து அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது. 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க தங்களது பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் ஏமாற்றாதீர்.

we-r-hiring

எந்த வைகோ குடும்ப அரசியலை எதிர்த்து பேசினாரோ, அதே வைகோவின் செயல்பாடு குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது. மதிமுகவின் சட்ட விதிகளுக்கு எதிராக அவர் செயல்பட்டிருக்கிறார். இன்னும் வைகோவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகள் உள்ளன. இனிமேலும் மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என்பதால் திமுகவுடன் இணைத்துவிடுவது நல்லது என்கிறேன் ”எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

திமுகவுடன் இணைகிறதா மதிமுக? துரைசாமி கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துரை வைகோ விளக்கம்!

இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கடிதத்துக்கு விளக்கம் அளித்துள்ள மதிமுக செயலாளர் துரைவைகோ, “பரபரப்பை ஏற்படுத்தவே திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதி இருக்கிறார். மனகசப்பு காரணமாக துரைசாமி இவ்வாரு கடிதம் எழுதியுள்ளார். மூத்த நிர்வாகி என்ற மரியாதை காரணமாக துரைசாமி மீது நடவடிக்கை இல்லை. அவரது குற்றச்சாட்டில் துளியும் உண்மை கிடையாது. திமுகவுடன் மதிமுகவை இணைப்பதில் கட்சியினருக்கு துளியும் உடன்பாடில்லை. திமுக கூட்டணியில் இருந்தாலும் மதிமுகவுக்கு என்று தனிப்பட்ட கொள்கை உள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்.

MUST READ