Homeசெய்திகள்அரசியல்HIV-யால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா சவுக்கு சங்கர்..? பகீர் கிளப்பும் திருச்சி சூர்யா

HIV-யால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா சவுக்கு சங்கர்..? பகீர் கிளப்பும் திருச்சி சூர்யா

-

- Advertisement -

அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் அரசியல் கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக திமுக ஆட்சியையும், முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் மற்றும் திமுகவினருக்கு எதிராக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார். இது மட்டுமில்லாமல் அரசு அதிகாரிகளையும், காவல் துறை அதிகாரிகளையும் ஒருமையில் பேசி வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் ரெட் பிக்ஸ் என்கின்ற யூடியூப் தொலைக்காட்சியில் பெண் காவல்துறையினரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பெண் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை தேனியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அடுத்தடுத்து வழக்குகளில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலைக்கு சவுக்கு சங்கர் தள்ளப்பட்டார்.

சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் : தேனி போலீஸார்

குண்டர் சட்டத்திற்கு கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் என இரு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சவுக்கு சங்கர் சமீபத்தில் விடுதலையானார்.

சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் அவ்வப்போது தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து வந்தார்.

இந்நிலையில், திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘தொடர்ந்து கஞ்சா சங்கர் தொடர்பாக மீடியாக்களில் நான் அம்பலப்படுத்தி வந்த நிலையில், கஞ்சா சங்கரோடு 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தி , 4 முறை கருக்கலைப்பு செய்ய நேரந்தது என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்த ஆதாரங்களை இங்கே வெளியிடுகிறேன்.https://x.com/TiruchiSuriyaa/status/1850468250930593964

அந்த மின்னஞ்சலின்படி, கஞ்சா சங்கர் என்ற புலனாய்வு புலிக்கு கடந்த 5 ஆண்டுகளாக HIVயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரால் எனக்கும் நோய் தொற்றுக்கு ஆளாகும் துன்பம் நேர்ந்திருக்கிறது.

இந்த நோய் தொற்று பற்றி கடந்த அக்டோபர் 12ம் தேதி சவுக்கு சங்கர் எடுத்த லேப் டெஸ்ட்டில் எய்ட்ஸ் தொற்று உறுதியான ரிப்போர்ட்டை அனுப்பியிருக்கிறார்

அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், சுகாதாரத் துறை மா.சுப்ரமணியன் உடனடியாக இந்த கிரிமினல் பேர்வழியை கட்டுக்குள் எடுத்து உண்மை அறியும் குழு அமைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிடில் மேலும் பெண்கள் ஆபத்தில் சிக்கி கொள்வார்கள்.

மேலும் மின்னஞ்சலில் அந்தப் பெண் குற்றம் சாட்டும் விஷயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில்.அவரால் பாதிக்கப்பட்ட 400 பெண்களும் இதனால் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது தமிழக காவல்துறை உடனடியாக விசாரணைக்கு தனிப்படை அமைத்து உண்மையை ஆராய்ந்து இந்த நோய் தொற்றை பரப்பிக் கொண்டிருக்கும் கஞ்சா ஷங்கர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்க தரப்பில் ஆதாரம் கேட்கும் பட்சத்தில் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன்’’ எனக்கூறி அதிர்ச்சி கிளப்பி இருக்கிறார்.

MUST READ