கர்நாடகத்தில் தனித்து போட்டியிட ஓபிஎஸ் அணி முடிவு?
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தெர்தல் நடைபெறவுள்ளது. பெங்களூரு, கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதனால், தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், பாஜகவின் வேட்பாளர் பட்டியலால், அதிர்ச்சியடைந்த பலர் அக்கட்சியில் இருந்து காங்கிரஸில் இணைந்துவருகின்றனர். கர்நாடக பாஜகவில் உட்கட்சி பூசல் காரணமாக குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் கர்நாடகத்தில் தனித்து போட்டியிட ஓபிஎஸ் அணி முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. ஓபிஎஸ் உத்தரவிட்டால் தனித்து களமிறங்கவும் தயாராக இருப்பதாகவும், தமிழகத்தில் கூட்டணியில், 20 தொகுதிகளை பெறும் பாஜக கர்நாடகத்தில் எங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க மறுப்பது வேதனையளிப்பதாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.