Homeசெய்திகள்அரசியல்4 ஆடு மேய்த்தவருக்கு ரூ.3.75 லட்சத்தில் வாடகை வீடு- செந்தில் பாலாஜி

4 ஆடு மேய்த்தவருக்கு ரூ.3.75 லட்சத்தில் வாடகை வீடு- செந்தில் பாலாஜி

-

4 ஆடு மேய்த்தவருக்கு ரூ.3.75 லட்சத்தில் வாடகை வீடு- செந்தில் பாலாஜி

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ரபேல் கடிகார பில் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி - தொடரும் வார்த்தைப் போரில் எல்லை  மீறுகிறார்களா?! | Minister Senthil Balaji vs Annamalai word war in covai  car blast politics - Vikatan

அப்போது பேசிய செந்தில் பாலாஜி, “அண்ணாமலை குடியிருக்கும் வீட்டு வாடகை மாதம் ரூ.3.75 லட்சம். இதற்கு மாதந்தோறும் யார் வாடகை கொடுப்பார்கள். அண்ணாமலை ஒரு பொய்யை மறைக்க 100 பொய்களை சொல்ல துவங்கி உள்ளார். வாடகை வீட்டில் குடியிருக்கும் அண்ணாமலை வேறொருவர் கொடுக்கும் வாடகையில் தங்கியிருப்பது அவருக்கு அசிங்கமாக இல்லையா? கட்சி தேசிய கட்சியாக இருந்தாலும் தலைவர் கோமாளியாக இருக்கிறார்.

தூய்மையாக இருக்கிறவர் அடுத்தவன் சொத்தில் ஏன் வாழணும் 4 ஆட்டை மேய்த்தவருக்கு ரூ.3.75 லட்சம் வாடகை வீடா? மனசாட்சி உள்ள யாரும் அண்ணாமலை வெளியிட்டதை பில் என்று எடுத்துக்கொள்ள மாட்டார்கள். வாட்ச் வாங்கியவர் ரூ.4 லட்சத்திற்கு வாங்கி ரூ.3 லட்சத்திற்கு விற்றார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. அண்ணாமலை வெளியிட்ட ரபேப் வாட்ச் பில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. வாட்ச் எண் மாறுபடுவது ஏன்? என்னிடம் வாட்ச் இல்லை, பரிசாக வாங்கினேன் என்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே.

தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார். என்னைப் பற்றியும், அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கின்றார். முதல்வர் அனுமதி பெற்று நானே நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கு தாக்க செய்ய இருக்கிறேன். அண்ணாமலை பேசுவது கோமாளித்தனமா இருக்கு.. இது அவருக்கு அசிங்கமா தெரியலையா?” எனக் கேவி எழுப்பியுள்ளார்.

MUST READ