spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எடப்பாடிக்கு புதிய நெருக்கடி…மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்…

எடப்பாடிக்கு புதிய நெருக்கடி…மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்…

-

- Advertisement -

அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு புதிய நெறுக்கடியை ஏற்படுத்தியுள்ளது.எடப்பாடிக்கு புதிய நெருக்கடி…அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்…சமீபத்தில் பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்தி பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என செங்கோட்டையன் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி துக்கிய செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் பாஜக தலைவர்களை செங்கோட்டையன் சந்தித்து திரும்பிய பின்னரே அதிமுக-பாஜக கூட்டணியின் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கோபிச்செட்டிபாளையம் அதிமுக அலுவலகத்தில், தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தீவிரஆலோசனை  மேற்கொண்டு வருகிறார். இதில், பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ.பண்ணாரியும் பங்கெற்றது அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. வருகிற 5ம் தேதி ”மனம் திறந்து பேசப் போவதாக” செங்கோட்டையன் அறிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

அந்த நாளில் ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்தியும், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஏற்கனவே போர்க்கொடி துக்கிய செங்கோட்டையன் டெல்லி சென்று வந்த பிறகு அமைதி காத்து வந்தாா். ஆனால், தற்போடு மீண்டும் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள செங்கோட்டையன் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

செங்கோட்டையன் போர்க்கொடியால், அதிமுகவில் எடப்பாடிக்கு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.

சின்னத்திரைக்கு வரும் பார்த்திபன்?

MUST READ