Homeசெய்திகள்அரசியல்கவிஞர் வைரமுத்துவின் 70-வது பிறந்த நாள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் 70-வது பிறந்த நாள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து

-

கவிஞர் வைரமுத்துவின் 70-வது பிறந்த நாள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை  பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

ஜூலை 13 ஆம் தேதி 1953 ஆம் ஆண்டு தேனி வடுகப்பட்டியில் பிறந்தார் வைரமுத்து. 1980களில் நிழல்கள் என்ற படத்தில் “இது ஒரு பொன்மாலைப் பொழுது” என்ற பாடல் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமாகி 40 வருடங்களுக்கு மேலாக 7500 பாடலுக்கும் மேல் எழுதியுள்ளார்.

ஏழு முறை சிறந்த பாடலாசரியருக்கான தேசிய விருதும், ஆறு முறை தமிழக அரசு விருதும் பெற்றுள்ளார்.  38 இலக்கிய படைப்புகளை படைத்துள்ள வைரமுத்து, கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். அதில் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப் போர், தண்ணீர் தேசம் ஆகியவை மிகவும் பிரபலமானவை. மேலும் பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் வைரமுத்து பெற்றுள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடல் ஒன்றையும் கடந்த மாதம் எழுதியுள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவிக்கும் போது அமைச்சர் கே.என். நேரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு உடன் இருந்தனர்.

கவிஞர் வைரமுத்துவுக்கு 70-வது பிறந்த நாள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து

சமூக வலைதளத்தின் மூலமாகவும் ‘’தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே! உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்!’’ என்று கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் வைரமுத்துவின் 70 வது பிறந்தநாளுக்கு பல்வேறு திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  சுமார் 43 வருடமாக திரை பயணத்தில் ஈடுபட்டுள்ள கவிஞர் வைரமுத்துவிற்கு பிறந்த நாளை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரக்ஷன் தலைமையில் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த பின்பு தனது வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் இருக்கும் வள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

MUST READ