spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ராகுல் காந்தி சிறை - சென்னையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தி சிறை – சென்னையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

-

- Advertisement -
ராகுல் காந்தி சிறை – சென்னையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கோபண்ணா தலைமையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி

பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ராகுல் காந்தி குற்றவாளி எனவும் அவருக்கு இரண்டு ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்தும், சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

we-r-hiring

இதனை கண்டித்து சென்னையின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல், ரயில் மறியல், பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் கோப்பண்ணா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கியதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ராகுல் காந்தி சிறை

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவர் கோபண்ணா, இளம் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஜனநாயக நாட்டில் பேசுவதற்கு எல்லாருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. மோடி அரசு கருத்தரிமையை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் சென்னை அண்ணா சாலை தர்கா அருகில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் சாலை மறியல் மற்றும் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அஸ்வத்தமன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மணிகண்டன், பிரதாப் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் ஏராளமான கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி சிறை

முன்னதாக ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர் இதனைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனால் சென்னை அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்ததற்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு இன்றைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக இரண்டு ஆண்டு காலம் சிறை தண்டனை என்பது பழிவாங்கும் செயல். எங்கள் இளம் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை கண்டு பிரதமர் மோடி பயந்துள்ளார்

மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகளுக்கெல்லாம் ஒருபோதும் நாங்கள் அஞ்ச மாட்டோம் மத்திய பாஜக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் நாள் நெருங்கிவிட்டது அதற்காக நாட்களை எண்ணத் தொடங்கி விட்டனர் எனவும் தெரிவித்தார்.

MUST READ