Homeசெய்திகள்அரசியல்ஈரோடு இடைத்தேர்தலில் சீதா லட்சுமியை ஆதரித்து சீமான் பிரச்சாரம்!

ஈரோடு இடைத்தேர்தலில் சீதா லட்சுமியை ஆதரித்து சீமான் பிரச்சாரம்!

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 24- ம் தேதியில் இருந்து பிப்ரவரி 3- ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தலில் சீதா லட்சுமியை ஆதரித்து சீமான் பிரச்சாரம்!ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரையில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் குறித்து கருத்து தெரிவித்திருந்த சீமானுக்கு எதிராக பெரியாரிய  அமைப்பினர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மொழி, இனம் குறித்த கருத்துக்களை கூறி பிரிவினையை ஏற்படுத்தி பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வரும் சீமான் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில்,  இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு சீமான் வரும் 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை  வருவதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ