கலைஞர் எவ்வாறு செயல்பட்டாரோ அதை விட ஒரு படி மேலாக செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்நல்லூர் மேற்கு பகுதி திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சென்னை மடிப்பாக்கம் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மின்சாரத் துறை அமைச்சர் செந்திபாலாஜி, சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,
நிதி நிலை அறிக்கையில் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துலட்சுமி மகப்பேறு திட்டம், மகளிர் சுய உதவி திட்டம் போன்ற மகத்தான திட்டங்கள் எப்போதும் சரியாக செயல்பட்டுவரும்.
அதே போன்று, மகளிர் உரிமைத் தொகை திட்ட அறிவிப்பு 20 மார்ச் 2023 அன்று தொடங்கப்பட்டது என்று கூறுவது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று. காலத்திற்கும் நினைவில் இருக்கும் திட்டம்.
சைதாப்பேட்டையில் 621 கோடி மதிப்பில் பறக்கும் 4 வழி மேம்பாலம், சைதாப்பேட்டை போக்குவரத்து நிலையம் விரைவில் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணகி நகர், பெரும்பாக்கம் பகுதியில் உடற்பயிற்சி கூடம், மருத்துவமனை போன்றவை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரவாயல் மேம்பாலம் திட்டத்தை கலைஞர் 1700 கோடி செலவில் அறிவித்து இருந்தார். ஆனால் அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதனை கட்ட முடியாது என்று கூறினார். 1700 கொடி செலவில் கட்ட பட இருந்த பாலம் தற்போது
5800 கோடி செலவில் ஈரடுக்கு பாலமாக கட்டப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
பால் லிட்டர் 3 ரூபாய் குறைப்பு, டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு போன்றவை
பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் போன்ற அருமையான திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது. 21 தமிழ்நாடு மேயர்களில் 11 பேர் பெண் மேயர்கள் என்பது பெருமைக்குறியது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதில் செய்யாமல் இருந்த பெண்கள் உரிமைத் தொகை இன்று அறிவித்து உள்ளார் என்றார்.
பின்னர் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,
தேர்தல் வாக்குறிதியில் 87 சதவீதம் தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். இன்று பெண்கள் உரிமை தொகை திட்டம் நிதிநிலையில் அறிவித்து உள்ளார். காலை உணவு திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ள இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே 15 லட்சம் மாணவ மாணவிகள் இதில் பயன் பெற்று வருகின்றனர்.
சென்னை, கோவை, ஓசூர் பகுதியில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற திட்டத்தையும் அறிவித்து உள்ளார். கடந்த ஆட்சியில் விட்டுப்போன அனைத்து திட்டங்களையும் பார்த்து பார்த்து நிறைவேற்றி வருகிறார்.
முட்டிபோட்டு முதலமைச்சர் ஆனவர்களால் இந்த நிதிநிலை அறிக்கையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அரவேக்காடு தானமாக நிதிநிலை அறிக்கை முடியும் முன்பே வெளியில் வந்து பேசி உள்ளனர்.
தாய்மார்களுக்கான அரசாக திமுக அரசு இயங்கி வருகிறது. மகளிர், இளைஞர், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற அனைவருக்கும் ஏற்ற திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார் என்றார்.
அடுத்து பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி,
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் போதும் சரி இல்லாத போதிலும் சரி பொது மக்களின் நலனை மனதில் வைத்து செயல்படுபவர்.
கொரோனா காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் 5000 ரூபாய் உதவித்தொகை மக்களுக்கு வழங்கவேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அப்போது இருந்த அதிமுக அரசு 1000 ரூபாய் மட்டுமே மக்களுக்கு கொடுத்தது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீதம் 4000 ரூபாய் தொகையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு தந்தார். ஈரோடு இடைத்தேர்தலில் 66000 வாக்குகள் வித்தியாசத்தில் கூட்டணி கட்சியை மக்கள் வெற்றி பெற வைத்ததற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு செய்த திட்டங்கள் தான்.
ஈரோடு தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று கூறுகிறார். ஏதாவது குற்றம் கூறவேண்டும் என்று கூறுகின்றனர். முழுக்க முழுக்க தேர்தல் நேர்மையாக தான் நடந்தது.
ஈரோடு தேர்தல் வேளையில் தினமும் எங்களை அழைத்து பொது மக்கள் என்ன கோரிக்கைகளை வைத்துள்ளனர் என்று தான் கேட்பார். கலைஞர் எவ்வாறு செயல்பட்டாரோ அதை விட ஒரு படி மேலாக செயல்பட்டு வருகிறார். இராணுவ வீரர்கள் மறைந்தால அளிக்கப்படும் தொகை 20 லட்சத்தில் இருந்து 40 லட்சம்மாக இந்த அரசு உயர்ந்துள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் கட்டமாக தேர்ச்சி பெறுவோருக்கு 10 மாதத்திற்கு 7500 ரூபாய் அளிக்கும் திட்டம், சென்னையில் அதிநவீன விளையாட்டு அரங்கம் திட்டம் என விளையாட்டு துறைக்கு அருமையான திட்டங்களை தீட்டியுள்ளார்.
அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் வந்த பிறகு பள்ளிகளில் 10, 20, 30 சதவீதம் என சேர்க்கை உயர்ந்துள்ளது. உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் மூலம் 29 சதவீதம் மாணவிகள் உயர்கல்வி செல்லும் சேர்க்கை உயர்ந்துள்ளது.
1000 ரூபாய் பெண்கள் உரிமை தொகை குறித்து எடப்பாடி பழனிச்சாமி கேட்டதால் தான் ஈரோடு தேர்தலில் நிதிநிலை அறிக்கையில் பெண்கள் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார். தற்போது அதை நிறைவேற்றி விட்டார் என்றார்.
கடைசியாக பேசிய சுப வீரபாண்டியன்,
எடப்பாடி பழனச்சாமி இந்த நிதி நிலை அறிக்கை மின்மினி பூச்சி போல் உள்ளது என்று கூறி உள்ளார், இவ்வாறு அவர் கூறும் பொது தெரிகிறது அவர் எவ்வளவு இருளில் உள்ளார் என்று.
ஓபிஎஸ் இந்த நிதி நிலை அறிக்கை நம்பிக்கை துரோகம் என்று கூறுகிறார். நம்பிக்கை துரோகம் குறித்து அவர் பேசலாமா? காலை உணவு திட்டம் மிகவும் அருமையானது. அந்த திட்டத்தை மாணவர்களோடு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமர்ந்து உண்ணும் போது தொடங்கி வைத்தார்.
செப்டம்பர் 15இல் 1543 அரசு பள்ளிகளில் தொடங்கபட்ட காலை உணவு திட்டம் ஜனவரியில் 1319 பள்ளிகளில் மாணவர்கள் வருகை கூடி உள்ளது.
இது போன்று மக்களுக்கு நன்மை செய்யும் போது உதய சூரியனை தேடி வரும் ஓட்டு.
பெரியாரின் எழுத்துகளை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல நிதி ஒதுக்கி உள்ளது தமிழ்நாடு அரசு. இதை 5 ஆண்டுகள் முன்பே செய்திருந்தால் பாஜக தேர்தலில் வெற்றி பெற்றிருக்காது. அம்பேத்காரின் எழுத்துகளை தமிழில் கொண்டு வரவும் நிதி ஒதுக்கி உள்ளது.
பெண்கள் வாக்களித்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது நீதிக்கட்சி தான்.
எந்த மாநிலத்திலும் சமூக நீதி கண்காணிப்பு இல்லை. அதனை கொண்டு வந்தது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தான்.
ஹிந்தி மாநாட்டை பிஜி தீவில் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் ஏன் நடத்த முடியவில்லை. ஏன் என்றால் பெரியார், அண்ணா, கலைஞர் தமிழ்நாட்டை காத்தது போல் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காத்து வருகிறார்.
தமிழை தமிழ்நாட்டில் தேடுங்கள். இந்த நாளில் பெண்களுக்கான உரிமை தொகை திட்டம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிறந்த நாள் பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி வர கூடாது என்று கேட்டு கொண்டார். ராகுல் காந்தி என்னை பேச விடுவதில்லை என்று கூறும் போது அவர் ஜனநாயகத்தை குறைபடுத்தி பேசுகிறார் என்றனர் பாஜகவினர். நாடாளுமன்றத்திற்கே வராத மோடி ஜனநாயகம் பற்றி பேசுகிறார். ஜனநாயகத்தை காக்க பாஜகவை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று சுப. வீரபாண்டியன் பேசினார்.