ஆளுநர் சட்டமன்றத்தில் வெளியேறியது போல் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக நிழல் அரசு நடத்தும் ஆளுநர் பதவியை நீக்க ஒன்றிய அரசு சட்டம் மாற்றம் செய்ய வேண்டும் பல்லாவரத்தில் சுப.வீரபாண்டியன் கண்டனம்.
வீடுமனை கால் கிரவுண்ட் இல்லாமல் மக்கள் அவதியுறும் நிலையில் 154 ஏக்கர் பரப்பளவில் ராஜபோக 36 அறைகளுடன் 9 கோடி மக்கள் வரிப்பணம் வீனாகிறது, அதனால் சட்டமன்றத்தில் வெளியேறியது போல் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கூறியுள்ளாா்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டையும், தமிழ்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி யை கண்டித்து பல்லாவரத்தில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் கண்ட ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர், தமிழ்நாடு அரசு சமூக நீதி கண்காணிப்புக்குழு தலைவரக உள்ள சுப.வீரபாண்டியன் கண்டன உரையாற்றுகிறார்,
மேலும் இந்த ஆர்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, வரலஷ்மி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ் உள்ளிட்ட ஆயிதத்திற்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது கண்டன உரையாற்றிய சுப.வீரபாண்டியன் பேசுகையில் மரபை மீறி எதுவும் சட்டமன்றத்தில் நடைபெறவில்லை தமிழ்தாய் வாழ்த்தை கேட்டவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்தமுறை சொன்ன காரணம் போல் வேறு காரணம் காட்டி வெளியேறினார்,
இன்று சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய அவர் தமிழ்நாட்டை விட்டும் வெளியேற வேண்டும், வீடுமனை கால் கிரவுண்ட் இல்லாமல் மக்கள் அவதியுறும் நிலையில் 154 ஏக்கர் பரப்பளவில் ராஜபோக 36 அறைகளுடன் 9 கோடி மக்கள் வரிப்பணம் வீனாகிறது என்றார், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக நிழல் அரசு நடத்தும் ஆளுநர் பதவியை நீக்க ஒன்றிய அரசு சட்டம் திருத்தம் செய்ய வேண்டும் என சுப.வீரபாண்டியன் கேட்டுக்கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் மான் திறிகிறது, நரியும் இருக்கிறது ( நான் உண்மையான நரியை சென்னேன்) என்றார், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியபோது காலையில் ஒரு அறிக்கை அதனை திருத்தம் செய்து மாலையில் ஒரு அறிக்கை என அளுநர் மாளிகையில் வெளியிடப்படுகிறது. இதனை, கேளி கூத்தாக உள்ளது என்று விமர்சித்துள்ளாா்.