spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் அறிவிப்பு!

மாணவியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் அறிவிப்பு!

-

- Advertisement -

ஐ.ஐ.டியில் உயர்கல்வி படிக்க தகுதிபெற்ற பழங்குடியின மாணவியின் சாதனையை முதல்வர் பாராட்டியுள்ளாா்.

மாணவியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் அறிவிப்பு!அரசு உறைவிடப் பள்ளியில் படித்த சேலம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி, ஜே.இ.இ அட்வான்ஸ் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சென்னை ஐ.ஐ.டியில் படிக்க தகுதி பெற்றுள்ளாா். தந்தையை இழந்தாலும் அவர் கனவை மாணவி நெஞ்சில் சுமந்து சாதித்ததாகவும், அவரது உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளாா். இது போன்ற நமது மகள்கள் பலர் சேர்வதுதான் ஐ.ஐ.டிக்கு உன்மையான பெருமை. அவரை போன்று பலரும் சாதனை படைக்க திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும் என தெரிவித்துள்ளாா்.

மதம் அரசுக்கானது அல்ல மக்களுக்கானது – திருமாவளவன் பேட்டி

we-r-hiring

MUST READ