10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேர் என மொத்தம் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் தளத்தில், தெரிவித்திருப்பதாவது; “10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். முதல் பொதுத் தேர்வை எழுதவுள்ளீர்கள். அந்த Excitement இருக்க வேண்டுமே தவிர, பயமோ பதற்றமோ இருக்கக் கூடாது. காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் என்றெண்ணி மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள். All the Best” என்று கூறியுள்ளார்.
சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!

