- Advertisement -
2025-26 கல்வியாண்டில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லலூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளாா்.
புதுமைப் பெண் திட்டம், தமிழ்புதல்வன் போன்ற திட்டங்களால், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. எனவே, கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025- 26ம் கல்வியாண்டில் மேலும் 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, கே.வி.குப்பம், துறையூர், உளுந்தூர்பேட்டை, செங்கம் ஆகிய 4 இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. இதனால், அப்பகுதிகளில் உள்ள 1,120 மாணவர்கள் பள்ளி முடித்து உயிர் கல்வி பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளாா்.
