spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉயரம் குறைந்தவர்களுக்கான சர்வதேச போட்டியில் அசத்திய 55 வயது பெண்!

உயரம் குறைந்தவர்களுக்கான சர்வதேச போட்டியில் அசத்திய 55 வயது பெண்!

-

- Advertisement -

 

உயரம் குறைந்தவர்களுக்கான சர்வதேச போட்டியில் அசத்திய 55 வயது பெண்!
File Photo

உயரம் குறைந்தவர்களுக்கான சர்வதேச விளையாட்டு போட்டியில் சேலத்தைச் சேர்ந்த வீராங்கனை நளினி அருணாச்சலம் மூன்று வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

we-r-hiring

ஒத்திவைக்கப்பட்ட ‘கிங் ஆஃப் கோத்தா’ ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

உயரம் குறைந்தவர்களுக்கான சர்வதேச போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்றன. சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த 600 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில், இந்தியாவில் இருந்து 18 பேர் பங்கேற்றனர். இதில் தமிழகத்தில் இருந்து ஏழு பேர் சென்றிருந்தனர். இவர்களில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான நளினி அருணாச்சலமும் சென்றிருந்தார்.

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இவர் பேட்மிண்டன், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று மூன்று வெண்கலம் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த தொடரில் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் சுமார் 40 பதக்கங்களை வென்றனர்.

MUST READ